Category: உள்நாட்டுச் செய்திகள்
Local | දේශීය පුවත් | உள்நாட்டுச் செய்திகள்
அமைதிகாக்கும் பணியின் மூலம் இலங்கைக்கு 130 மில்லியன் டொலர் வருமானம்.
இலங்கை விமானப் படை அமைதிகாக்கும் பணிகளின் மூலம் பாரிய அளவிலான வருமானத்தை ஈட்டியிருக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கைக்கு 130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்திருக்கிறது. அமைதிகாக்கும் பணிகளுக்கென மற்றுமொரு குழுவினர் ... Read More
சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லத்தடை.
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலத்தில் நல்லதண்ணியிலிருந்து மலை உச்சிவரை பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்லவும், விற்பனைய செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலையுடன் கூடிய புகைக்கும் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சிவனொளிபாத ... Read More
ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு.
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவல ... Read More
PET ஸ்கேன் இயந்திரத்திற்கான கதிரியக்க மருந்துகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை.
புற்று நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படும் பெட் ஸ்கேன் (PET) இயந்திரத்திற்கு தேவையான கதிரியக்க மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அணுசக்தி சபை, சுகாதார அமைச்சு, எக்ஸெஸ் என்ற தனியார் நிறுவனம் ஆகியன ... Read More
பாடசாலை சீருடைகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் தயார்.
2025ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றராகும். அதனை மானியமாக வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சுக்கு ... Read More
நிகழ்நிலை மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு.
கடவுச்சீட்டு விவகாரம், தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சினையல்ல என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். ... Read More
கடவுச்சீட்டுக்களை நிகழ்நிலை ஊடாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை நிகழ்நிலை ஊடாக பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நிலூஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான தினத்தை ... Read More
நுகர்வோர் அதிகார சபை தயாரித்த அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு.
நெல், அரிசி கையிருப்பு என்பன பற்றித் தயாரிக்கப்பட்ட அறி;க்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிடம் இன்று கையளிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம், பொலநறுவை உட்பட நான்கு ... Read More
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு வேண்டுகோள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது கவனமாக செயற்படுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையே இதற்குக் காரணம் என அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ... Read More
விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை
விவசாயத்திற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சேவை நிலையங்கள் ஊடாக அந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் திறன் விவசாயிகளுக்கு இருப்பதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த ... Read More