பாடசாலை  சீருடைகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் தயார்.

2025ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றராகும்.
அதனை மானியமாக வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றது என இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, அனைத்து பாடசாலைகள் மாணவர்களுக்கும் சீருடை வழங்குவதற்கான சீன அரசாங்கத்தின் மானியத்தை ஏற்றுக்கொள்ளும் பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )