அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு வேண்டுகோள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது கவனமாக செயற்படுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையே இதற்குக் காரணம் என அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வாகனம் ஓட்டும் போது மணிக்கு 60 கிலோமீட்டர் வேக வரம்பை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
2 வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 50 மீட்டர் இடைவெளி வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )