நிகழ்நிலை மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு.

கடவுச்சீட்டு விவகாரம், தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சினையல்ல என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு பெருமளவு தீர்வு கண்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தற்போது ஒரு முறைக்கு வந்துள்ளது.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்கும் வசதியை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )