நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை
சாரணர் இயக்கம், கடேற் படைப்பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களை பலப்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பினைப் பெறுவது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி எதிர்கால பயணத்திற்கு பரந்த பங்களிப்பைப் பெறுவது தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ஜனாதிபதிப் பதக்கம் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். சாரணர் இயக்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரிக்கத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாரணர் இயக்கம் கடேற் படையணிஇ இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களின் ஊடாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.