ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை பொறுப்பேற்கப்படும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனினும், தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் என சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகின்றது. இது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கான தகவலை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த இணையத்தள முகவரி https://www.elections.gov.lk என்பதாகும்.