ஹமாஸ் -அரசியல் தலைவரின் கொலையை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மயில் ஹனியை கொலை செய்ததை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பங்கேற்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர்.