கேரள – வயநாட்டு நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்பு
கேரள மாநிலத்தின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கிய சுமார் ஆயிரம் பேரை இந்திய இராணுவம் மீட்டுள்ளது.
150ற்கும் மேற்பட்டவர்கள் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர். 187 பேரை காணவில்லை என்று மாநில முதலமைச்சு அலுவலகம் அறிவித்துள்ளது.
அவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. கேரளா 2018ஆம் ஆண்டில் எதிர்கொண்ட கடும் வெள்ளத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான அனர்த்தமாக இந்த நிலச்சரிவு கருதப்படுகின்றது.