பல ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில், அந்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. அதன்படி, களனி. களு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

பாணதுகம பிரதேசத்தில் நில்வலா ஆறு, அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்ந்து பெய்தால், அந்த ஆறுகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். பல ஆறுகளின் கிளை ஆறுகள் நிரம்பி வழிவதால், தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )