உக்ரேன் நகர் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல்.

உக்ரேனின் கார்கிவ் நகரின் மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அந்த நகரின் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 வயது சிறுவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

அத்துடன், அந்த நகரில் உள்ள 12 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பும் தாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 59 பேர் காயமடைந்தனர்.

ரஷ்யா தனது நாட்டின் மீது தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், ரஷ்யாவின் முக்கிய இலக்குகளைத் தாக்குவதற்காக,

தாம் சர்வதேச உறவு நாடுகளிடம் அனுமதி கேட்பதாக உக்ரேன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 400ற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )