சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது அவசியம் – அனுர
சட்டவாட்சி நாடொன்றுக்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி கண்ட சகல நாடுகளும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சட்டரீதியாக அங்கீகரித்திருக்கின்றன.
ஆனால், அதிகாரமுள்ளவர்களுக்கு ஒரு சட்டமும், அதிகாரமற்றவர்களுக்கு வேறொரு சட்டமும் இலங்கையில் அமுலாவதாக அனுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
இதனால் நாட்டில் பாரியளவிலான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில் அரசியல் தலைவர்கள் உள்ளார்கள். இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
சட்டவாட்சியை மதிக்கும் அரசாங்கமொன்றை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.
கிராமிய மட்டத்திலான வறுமையை ஒழிப்பது அவசியமாகும். கிராமங்களில் முறையான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆசிரியர் சேவையில் பாரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் 20 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.