உக்ரேன் விமானப் படைத் தளபதி பதவி நீக்கப்பட்டுள்ளார்.

உக்ரேன் விமானப்படைத் தளபதி பதவி நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி வொலடிமிர் செலன்ஸ்கியின் பணிப்புரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இவரது பதவி நீக்கத்திற்கான உடன்டிக் காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சகல வெற்றி வீரர்களையும் பாதுகாப்பது தனது கடமையாகும் என்று ஜனாதிபதி வொலடிமிர் செலன்ஸ்கி தனது ரெலிக்கிராம் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எவ் – 16 வகையைச் சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று உக்ரேனின் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலினால் அழிக்கப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )