வேட்பாளர்களின் பெயர்களை நீக்க முடியாது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நீக்கவோ அகற்றவோ முடியாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் காலஞ்சென்ற ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்லியாஸின் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களினதும் பெயர்கள் வாக்குச்சீட்டுகளில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரணமடைந்த வேட்பாளருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுப்பார்கள் எனில், மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் சமன்ஸ்ரீ ரட்நாயக்க சுட்டிக்காட்டினார்.
