இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனா ஆர்வம்
தெற்கு சீனாவின் முன்னணி தொழில் முயற்சியாளரான Yong Jo Mun பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்துள்ளார்.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. வலுசக்தி, விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள யொங் யோ முன் இதன்போது விரும்பம் தெரிவித்தார்.
பழ உற்பத்தி துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். உரிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள யொன் யோ முன் காட்டும் ஆர்வம் பற்றி பிரதமர்
தினேஷ் குணவர்த்தன வரவேற்று பேசினார். மசகு எண்ணெய் பயன்பாட்டிலிருந்து தூரமாவது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கடற்றொழில், சுகாதாரம், கட்டட நிர்மாணத்துறை என்பனவற்றுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.
