ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டின் தீர்ப்பு இன்று
ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்துள்ள மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
எனினும் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை அதிகரித்தமையினால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் குழு அறிவித்தது.
அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5 – 0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதையடுத்து தமது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறைப்பாடு செய்துள்ளார்.
தமது தகுதிநீக்கத்தை இரத்துசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
