ஜப்பானில் நிலவும் சீரற்ற காலநிலையினால், வடகிழக்கு பிராந்தியம் பாதிப்பு

ஜப்பானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்நாட்டின் வடகிழக்கு பிராந்தியம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஐந்து மணியளவில் அந்தப் பிராந்தியத்திற்கான 78 விமான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டன.

வடகிழக்கு பிராந்தியமான டோஹோஹூ பிராந்தியம் மற்றும் டோக்கியோ ஒசாக்கா நகரங்களை இணைக்கும் விமான பயணங்களே இவ்வாறு ரத்துச் செய்யப்பட்டன.

நிப்போன் எயார்வேஸின் எட்டு விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டன. இதனால் ஒசாக்கா மற்றும் ஒமோரிக் நகரங்களுக்கான பயணங்கள் தடைப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )