தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்கள் இடம்பெறுவதாக ஆணைக்குழு தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்கெண்ணும் மத்திய நிலையமாக மாவட்டத்திற்கு ஒரு மத்திய நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காத பட்சத்தில் அடையாளத்தை சரிபார்த்த பின்னர் உள்ளுர் தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என ஆணைக்குழுவின் பிரதி தேர்தல் ஆணையாளர் கே.ஜே.சம்பத் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பதற்கான அடையாளத்தை சரிபார்க்க, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிபத்திரம், முதியோர் மற்றும் ஓய்வுதிய அடையாள அட்டை, மதகுருமார் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தற்காலிக அடையாள அட்டை என்பவற்றை பயன்படுத்தலாம்.

தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வழங்கப்படும் தகவல் உறுதிப்படுத்தல் கடிதமும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )