அரச நிர்வாகம் வினைத்திறனோடு செயற்படுவது அவசியம் – சஜித் பிரேமதாஸ

அரச நிர்வாகம் வினைத்திறனோடு செயற்படுவது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச முதலீடுகள் சிலவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன.

அவற்றை வெற்றி பாதையில் இட்டுச் செல்வதற்கு தனது குழு தயாராகவுள்ளது என்று திரு.பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட கருத்து வெளியிடுகையில், இந்த நாட்டில் கோஷ்டிவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை சமகி ஜனபலவெகய கட்சி இல்லாதொழிக்கும் என்று தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )