கடும் காற்று, மழை, இடிமின்னல் மற்றும் கடல்கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

கடும் மழை, கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை மற்றும் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். மத்திய – கிழக்கு வங்களா விரிகுடாவை அண்மித்து காணப்படும் ஆழமான காற்றழுத்த நிலை சூறாவளியாக விருத்தி அடையலாம்.

அது வடமேல் திசையை நோக்கி இன்று காலை வேளையில் நகரும்.

இது இன்னிரவு அல்லது நாளை வரை வங்களா விரிகுடா மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை ஊடாக இந்தியாவை நோக்கி பயணிக்கும்.

இதனால் அந்த கடற்பிரதேசத்தில் மணிக்கு 70 தொடக்கம 80 கிலோமீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசக்கூடும்.

இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதனால் இன்றும் நாளையும் மீனவர்கள் மற்றும் கடல்சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்சமயம் இந்த கடற்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் உடன் கரைக்கு அல்லது பாதுகாப்பாக இடங்களுக்கு செல்ல வேண்டும்.

இன்றும் நாளையும் கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடும் இற்றைப்படுத்தப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )