மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கான இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துளளார்.
ஹோமகமவில இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி, அதிக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக காணப்படும் நிலையில், ஜனாதிபதி இதுவரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு முறைகள் மாத்திரமே கலந்துரையாடியுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
