ஐக்கிய நாடுகள் தினம் இன்று – 79 வருடங்கள் பூர்த்தி.
ஐக்கிய நாடுகள் தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 79 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இரண்டாவது உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சமாதானம் மற்றும் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணிச் செல்வதற்காகவும் அனைத்து மக்களுக்கும் சிறந்த பொதுவான சர்வதேச அமைப்பின் தேவையின் காரணத்தினால் 1945ஆம் ஆண்டு இதேபோன்றதொரு தினத்தில் இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு என அமெரிக்காவின் 32ஆவது ஜனாதிபதி பிராங்ளின் டொலானோ பெயரிட்டார்.
அந்தக் காலப்பகுதியில் பிரித்தானிய பிரதமரான வின்சன் சேர்ஜியிலின் ஒத்துழைப்பும் இதற்கு கிடைத்தது. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் கூடிய அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் 1944ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் ஏழாம் திகதி வரை ஒன்றுகூடி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் திட்டங்கள் குறித்து வகுத்தார்கள்.
1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி 51 நாடுகள் ஐக்கிய நாடுகள்pன் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
அந்தப் பிரகடனத்தின் செல்லுபடி தன்மை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முதலாவது கூட்டம் 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி லண்டனில் இடம்பெற்றது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் தினமாக அறிவிக்கப்பட்டது.
1955ஆம் ஆண்டும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இணைந்தது.
பிரித்தானிய பிரஜையான கிலாடிவின் ஜொப் ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலளாராக பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
