சகல மாணவர்களும் ஆங்கில அறிவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

சகல மாணவர்களும் ஆங்கில அறிவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

நாட்டின் சகல பிள்ளைகளினதும் ஆங்கில அறிவை எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக English for all   என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக அவர் கூறினார். கல்வி அமைச்சராக தாம் பணியாற்றிய காலத்தில் வெள்ளை பத்திரம் ஒன்றின் ஊடாக தாம் இதனை முன்மொழிந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று ஆங்கில மொழிப் பிரச்சினை ஏற்பட்டிருக்க மாட்டாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மல்வான பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதுபற்றி கருத்து வெளியிட்டார். ஜென் ஸீ (Z) எனப்படும் ஸீ (Z) தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது தமது நோக்கமாகும்.

போலி உறுதிமொழிகளை அறிமுகம் செய்துள்ள சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் அரசியல் சதிகளுக்கு சிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )