மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியுள்ளார்கள்.

எந்தவொரு நாட்டிலும் ஏற்படும் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான நெருக்கடிகளின் போது சரியான அனுபவம் வாய்ந்த தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் பயனுள்ளவையாக அமையும் என்று மல்வத்து விஹாரையின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய வேளையில் எந்த அச்சமும் இன்றி பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி இலங்கையில் காணப்பட்ட சிக்கல்களை சீர்செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் தேரர் கூறினார்.

உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புக்களின் ஒத்துழைப்போடு தாய்நாட்டை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ஆற்றிய பணிகளை அனைவரும் புரந்துகொள்வது அவசியம் என்றும் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் உட்பட மஹாநாயக்கர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஜனாதிபதிக்கு ஆசீர்வாதங்களை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )