இலங்கை – நியுசிலாந்து கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்.
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் – இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. காலி மைதானத்தில் போட்டி 10 மணி அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியின் போது விசேட விடுமுறை தினமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் போட்டி இடம்பெறாது. அடுத்த நாள் தொடர்ந்தும் போட்டி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES விளையாட்டு