புலமைப்பரீட்சைக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் தோற்றியுள்ளனர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் தோற்றியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 849 மத்திய நிலையங்களில் இன்று பரீட்சை நடைபெற்றது. மூன்று இலட்சத்து 23 ஆயிரத்து 879 பேர் பரீட்சைக்குத் தோற்றினர்.

மாற்று வலுவுடைய மாணவர்களுக்காக ஏழு பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையமும் அமைக்கப்பட்டிருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )