தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி தெளிவூட்டப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி தெளிவூட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்காளர்கள் புள்ளடியினை மாத்திரம் இட்டும் வாக்களிக்க முடியும். இதேவேளை, விருப்புத் தெரிவுகளையும் இடமுடியும்.

இதன்படி இலக்கம் ஒன்றை இட்டும் வாக்களிக்கலாம். அத்துடன் இரண்டாம் மூன்றாம் இலக்கங்களை விருப்பு வாக்குகளாக ஏனைய உறுப்பினர்களுக்கு பதிவிட முடியும் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவத்துள்ளார்.

எனினும், புள்ளடியிட்டு பின்னர் இலக்கங்களை இட முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும். ஜனாதிபதித் தேர்தல்களின் போது விருப்புத் தெரிவுகளை கணக்கிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமை.

இது இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரம் விசேடமான ஒரு விடயம் அல்ல என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

வாக்களிக்கும் போது, வாக்களித்த வேட்பாளர் பற்றி வெளிப்படுத்தும் வாக்காளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்காத நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சிறைத்தண்டனை அல்லது தண்டம் விதிக்கப்படும் வகையில் சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுமுறை வழங்காத நிறுவன பிரதானிகளுக்கு ஒருமாத கால சிறைத்தண்டனை அல்லது இரண்டு இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, வாக்காளர் அட்டைகளில் 91 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து 21ம் திகதி வரை தபால் அலுவலகங்களில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )