தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் கைகோர்த்திருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் கைகோர்த்திருக்கிறார்கள்.

பொருத்தமான அரசாங்கத்தை அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் ஒன்றிணைந்திருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பன்னல நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். தமது அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் அரசாங்கமாக அமையும்.

தமது கட்சியுடன் மக்கள் கைகோர்க்கும் வேளையில் ஏனைய அரசியல் கட்சிகள் தமக்கு எதிரான சேறு பூசும் நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அனுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )