
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்குத் தீர்வு.
ஜனாதிபதித் தேர்தலுக்கு மேலும் எட்டு நாட்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் தொடர்பான 218 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் இதில் வன்செயல்கள் பதிவாகவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. தேர்தல் சட்டங்களை மீறியமை பற்றிய 214 முறைப்பாடுகள் இதில் அடங்குவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கடந்த ஜுலை மாதம் 31ம் திகதி முதல் இதுவரை 3 ஆயிரத்து 828 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதில் 3 ஆயிரத்து 190 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
