தனிநபர் வருமான வரி கட்டமைப்பு விரைவில் திருத்தம்.
தனிநபர் வருமான வரி முறைமையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் திருத்தங்களை அறிமுகம் செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
வரி செலுத்துவோருக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்குடன் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறது. 2023ம் ஆண்டின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி மறுசீரமைப்பு கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் நிவாரணம் கிடைப்பதோடு நிதி பொறுப்புக்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வரி பொருத்தல் முறைமையை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும்.
