தோட்டத் தொழிலாளர்களுக்கு வரையறையின்றி நாளாந்த சம்பளம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு வரையறையின்றி நாளாந்த சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1,350 ரூபாவாகும். ஒரு கிலோ தேயிலைக் கொழுந்திற்காக மேலதிகமாக 50 ரூபாவை செலுத்துவது அவசியமாகும்.
இறப்பர் தோட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு கிலோ இறப்பர் பாலுக்கு 50 ரூபாவை மேலதிகமாக செலுத்துவது அவசியமாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றுக்கான பங்களிப்புத் தொகை ஆயிரத்து 350 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
