அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க நாமல் ராஜபக்ஷ திட்டம்.

அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க நாமல் ராஜபக்ஷ திட்டம்.

நாட்டின் பாரம்பரியத்தையும் பெருமையையும் நிலைநாட்டி அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்கத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தநாட்டின் தொன்மையான கலாசாரத்தையும் கலையையும் பாதுகாத்;து, நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதே தமது நோக்கமாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையை உலகளவில் விஸ்தரிப்பதன் மூலம் இலங்கையிலும் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் அந்த திட்டங்கள் ஒவ்வொரு துறையுடன் இணைக்கப்படவில்லை.

நீர், சூரிய, காற்று மற்றும் பச்சை வீட்டு விளைவு போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு இலங்கையை எரிசக்தி ஏற்றுமதி மையமாக மாற்ற வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )