ஒப்பந்தம், வரி முறைமை மாற்றம் மீண்டும் வரிசையுகத்திற்கு இட்டுச்செல்லும்

ஐக்கிய தேசியக் கட்சி முதலில் சிந்திப்பது நாடு தொடர்பிலேயே என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் செயற்படுவதில் தமக்கு அத்தகைய அனுபவம் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மூன்று பில்லியன் ரூபா தேவையென கடந்த தேர்தல் கொள்கை அறிவிப்பில் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபி இது தொடர்பில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அன்று அறிவித்ததன் காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் பிரச்சினை தொடர்பில் பாரிய பொறுப்புக் காணப்பட்டது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம், அதேபோல் 18 நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டது. அதன்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ளது.

கடினமான காலங்களை இயல்பான நிலைக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிக்க நேர்ந்தது. இதன்போது வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்நிலையில் தற்சமயம் வரிச் சுமையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்சமயம் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த வரிகளை உடனடியாகக் குறைக்கும் பட்சத்தில் மீண்டும் 2022ஆம் ஆண்டு காணப்பட்ட வரிசையுகத்திற்கு மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வரியைக் குறைப்பது தமது விருப்பமாக இருந்தபொழுதிலும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பின்னரே அதனை மேற்கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவதோ, வரி முறைமையை மாற்றுவதோ மீண்டும் வரியுகத்திற்கு இட்டுச்செல்லும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )