சிறுபோக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்.

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு கிலோ நாட்டரிசி நெல் 105 ரூபா, ஒரு கிலோ சம்பா நெல் 115 ரூபா, கீரி சம்பா நெல் ஒரு கிலோ 130 ரூபா என்ற உத்தரவாத விலையில் கீழ் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.

நெல் கொள்வனவு வேலைத்திட்டம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாக தலைவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )