வறுமை ஒழிப்பு: புதிய வேலைத்திட்டம் – சஜித் பிரேமதாச
கூட்டுறவுத் துறையுடன் இணைந்து வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச ஆரம்பித்த ஜனசவிய என்ற வேலைத்திட்டத்தைவிட வலுவான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கூட்டுறவுத் துறை பிரதிநிதிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது சஜித் பிரேமதாச இதுபற்றிக் கருத்து வெளியிட்டார். கூட்டுறவு வங்கித் துறை வலுப்படுத்தப்பட இருக்கின்றது. ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தின் மீது புதிய அரசாங்கம் கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.