அயர்லாந்துடனான போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு வெற்றி.
இலங்கை – அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி-20 கிரிக்கட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
டப்ளினில் நேற்று இந்த போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 16 தசம் 4 ஓவர்களில்; 3 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
CATEGORIES விளையாட்டு