கட்சி மாறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சட்டங்கள் அறிமுகம்

சொந்த நலனுக்காக கட்சி மாறும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கட்சி மாறும் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சி மாறும் அரசியல் கலாச்சாரத்தை நிறுத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியலில் தேர்தல்களில் மக்களின் ஆணையை பெற்றவர்கள் தமது தமது தனிப்பட்ட நலன்களுக்காக கட்சி மாறி ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களிடம் சலுகைகளைப் பெற்ற வரலாறு உண்டு.

இவ்வாறான அரசியல்வாதிகளை மக்கள் விரும்பவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )