திருமண வயதெல்லையை குறைத்து தாக்கல் செய்யப்பட்ட சட்டமூலத்திற்கு ஈராக்கிய பெண்கள் எதிர்ப்பு.

ஈராக்கில் தற்போது 18 வயதாகக் காணப்படும் திருமண வயதெல்லையை, பெண்களுக்கு 9 ஆகவும், ஆண்களுக்கு 15 ஆகவும் குறைத்து ஈராக் நீதி அமைச்சு சட்டமூலம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஈராக்கில் ஒன்பது வயது சிறுமியும், 15 வயது சிறுவனும் சட்டப் பூர்வமாக திருமணம் செய்துகொள்ள முடியும். இஸ்லாமிய மதச்சட்டத்தை தரப்படுத்தவும் தகாத உறவுகளிலிருந்து இளம் பெண்களை பாதுகாக்கவும் திருமண வயது குறித்த புதிய சட்டமூலம் முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சட்டமூலம் பாலிய திருமணத்தை ஊக்குவிக்கும் என்றும்;, குடும்ப விவகாரங்களில் நீதிமன்ற அதிகாரத்தை குறைத்து, மதகுருமார்களை கைஓங்கச் செய்யும் என்றும் அஞ்சப்படுகிறது.

இதனால் பெண்களின் சொத்துரிமை, வாரிசு உரிமை, விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்று ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்வி இடைவிலகல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல், குடும்ப வன்முறை அதிகரித்தல் போன்றவை உள்ளிட்ட சிக்கல்கள் பாலிய திருமணத்தினால் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )