புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பிய தொகை 56 கோடி டொலர்ளாகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பிய தொகை 56 கோடியே 60 லட்சம் அமெரிக்க டொலர்களாகும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 10.03 அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு 50 கோடி டொலர்களையும் தாண்டியுள்ளது.

சட்ட ரீதியாக நாட்டுக்கு பணத்தை அனுப்பும் முறையில், மின்சார வாகன இறக்குமதிக்கான அனுமதி, குறைந்த வட்டியில் பல்நோக்குக் கடன்கள், வீட்டுக் கடன் திட்டங்கள் போன்ற பல சலுகைகளை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )