சீஷெல்ஸ் கடலுக்கு அருகில் இலங்கை மீனவர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

சீஷெல்ஸுக்கு அருகில் உள்ள கடலில், ஒன்பது இலங்கை மீனவர்களுடன், இரண்டு மீன்பிடிப் படகுகள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக இலங்கைக்கான சீஷெல்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து சோமாலியா நோக்கி பயணித்த Blue Ocean – 2,  Blue Ocean – 6 ஆகிய ரக படகுகளே ஆபத்தில் சிக்கியுள்ளன.

டுபாயில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் இந்தப் படகுகளை கொள்வனவு செய்து இலங்கையர்களுடன் சோமாலியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக தூதரகம் குறிப்பிடுகிறது.

இந்த நிலையில், தற்போது அந்த படகுகளில் இருந்த உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் என்பன தீர்த்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, அந்நாட்டு கடலோர காவல்படையின் மீட்புக் கப்பல் அந்த கடல் பகுதிக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )