ஜனாதிபதித் தேர்தல்: 14 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், 2024 வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், நாடளாவிய ரீதியில், எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் என தேர்தல்; ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான செய்திகள் சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன. தேர்தல் ஆணைக்குழு அவ்வாறான அறிவிப்பை வெளியிடவில்லை என அவர் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலின் போது, வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதியில் அமைந்துள்ள தேர்தல் மத்திய நிலையத்தில் வாக்களிக்க முடியும்.

தபால் மூல வாக்காளர் ஒருவர், தனது சான்றளிக்கும் அதிகாரி அலுவலகத்தில் அந்த அதிகாரியின் முன்னிலையில் வாக்களிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளரின் விலாசத்திற்கு, தமது பெயர், வாக்குச் சாவடி, திகதி ஆகியவற்றைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ வாக்காளர் பத்திரம் தபால் திணைக்களத்தின் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அந்த உத்தியோகபூர்வ வாக்குப்பதிவு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வெளி பகுதிகளில் வேறு எந்த மத்திய நிலையத்திலும் வாக்களிக்க முடியாது. எனவே, போலியான செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வ வாக்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து தமது பிரதேச தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு தேர்தல்; ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட செயலகங்;களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும் தபால் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.

மேலும், பொது நிர்வாக அமைச்சு, தொழிலாளர் திணைக்களம், கல்வி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், தபால் அலுவலகம், நீர் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை என்பனவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சகல தபால் விண்ணப்பங்களும் உரிய மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்டி அதிகாரிக்கு அனுப்பப்பட வேண்டும். சகல மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம். தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )