தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது – அனுர குமார 

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தவிர்க்க முடியாத மட்டத்தை தற்சமயம் அடைந்திருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்காக ஓய்வுபெற்ற முப்படையினரின் ஒன்றியம் அந்த வெற்றியின் பிரதான பங்காளியாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் முப்படை ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக 100 பிரதான பேரணிகள் நடத்தப்படவுள்ளன. அதன் முதலாவது பேரணிக் கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி குருநாகலில் இடம்பெறவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )