
முன்மாதிரியான பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி உருவாகும்.
வரலாற்றில் முன்மாதிரியான பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி உருவாக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்களுக்கு நெருக்கமான அரசியல் தலைமைத்துவம் இன்றியமையாதது.
பலமான அரசியல் பொறிமுறையினால் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் என கஹவத்தை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
இது வரைக் காலமும் பாராளுமன்றத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் மீது பொதுமக்களுக்கு சிறந்த அபிப்பிராயம் இல்லை. க
டந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தை உருவாக்கும் போது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மக்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை, அந்த மக்கள் அரசாங்கத்தை வழிநடத்தியபோது சீர்குலைந்துள்ளது.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்க்கக்கூடிய நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.