கனடா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவு வலுப்படுத்தப்படும்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஹெரிக் வோல்ஸிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் காரியாலத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது நீண்டகால ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் பல்வேறு துறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவத்கு கனடா அர்ப்பணிப்புடன் செயற்படும் என உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மகளிர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவது பொருளாதாரத்திற்கு சிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்திக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )