இலங்கையர் என உணரும் நாட்டை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையர்கள் என அனைவரும் உணரும் நாட்டை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

திருகோணமலையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைக்கும் வரை வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் மூவர் அடங்கிய அமைச்சரவைக் கொண்ட அரசாங்கத்தை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.

மக்களின் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பொறுப்புக்கள் தம்மீது உள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )