மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணி இடையிலான போட்டி இன்று
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கண்டி – பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி இன்று பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும். இன்றைய போட்டியிலும் பங்கேற்காதிருக்க ஆரம்ப துடுப்பாட்ட பெதும் நிஷாங்க தீர்மானித்துள்ளார்.
காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணாக ஆறு நாட்கள் ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, இன்றைய போட்டியிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கடந்த போட்டியில் அறிமுகமான நிஷான் மதுஷங்க களமிறங்கவுள்ளார்.
CATEGORIES விளையாட்டு