ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு ஆரம்பம்.

அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதார நாடுகளின் பிரிக்ஸ் குழுவின் தலைவர்கள் ரஷ்யாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மூன்று நாள் மாநாடு ரஷ்யாவின் மத்திய நகரமான கஸானில் நேற்று ஆரம்பமானது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே இதில் உறுப்பினர்களாக உள்ளன,

இதேவேளை, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை நாடுகளும் மாநாட்டில் இணைந்து கொண்டுள்ளன.

அதன்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )