இலங்கையின் வெளிவிவகார கொள்கைக்கு சர்வதேச ரீதியில் பாராட்டு.

இலங்கை தனது வெளிவிவகாரக் கொள்கையை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளதாக சர்வதேச இராஜதந்திர நடவடிக்கை தொடர்பான உலகப் புகழ்பெற்ற Foreign Policy  நாளிதழ் தெரிவித்துள்ளது.

முறையான வெளிவிவகாரக் கொள்கை காரணமாக, அரசாங்கத்திற்கு பல வெற்றிகளை அடைந்து கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலை எதிர்பாராத நெருக்கடியாக மாறினால், அதனை சமாளிக்க முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம். அதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒரு குழு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் செயற்படும். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மற்றைய குழுவின் பொறுப்பாகும்.

இந்த இரண்டு குழுக்களையும் கண்காணிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து அனைவரும் அறிந்துள்ள நிலையில், இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையாக இந்த மூன்று குழுக்களும் நியமிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )