Fems இனால் இலங்கையின் முதலாவது மும்மொழிகளிலுமான மாதவிடாய் தடங்காணல் App ஆன ‘Fio’ அறிமுகம்

Fems இனால் இலங்கையின் முதலாவது மும்மொழிகளிலுமான மாதவிடாய் தடங்காணல் App ஆன ‘Fio’ அறிமுகம்

இலங்கையின் முன்னணி பெண்கள் சுகாதார தூய்மை வர்த்தக நாமமான Fems, நாட்டின் முதலாவது மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் தடங்காணல் app ஆன ‘Fio’ வை, 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்தது. பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மாதவிடாய் சுகாதார அறிவூட்டல், மாதவிடாய் சக்கர தடங்காணல் மற்றும் பிரத்தியேகமான மாதவிடாய் சுகாதாரத்துக்கான பாதுகாப்பான தள உருவாக்கம் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த app விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சுயாதீனமாகவும், மாதவிடாய் தொடர்பில் காணப்படும் சமூக கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டவர்களாகவும் திகழ்வதற்கும், நாடு முழுவதையும் சேர்ந்த பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஆதரவளிப்பதும் எனும் நோக்கத்துக்கமைய, இந்த புரட்சிகரமான app செயலாற்றுகின்றது. 100% இலவசமாக பயன்படுத்தக்கூடிய வகையில் Fio வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு தமது மாதவிடாய் சக்கரத்தை தடங்காண்பது, நம்பத்தகுந்த மாதவிடாய் பற்றிய தகவல்களைப் பெறுவது மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவது போன்ற வசதிகளை வழங்குகின்றது. தடைகளை தகர்த்து, இந்த app சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காணப்படுவதுடன், இலங்கையில் சகல பெண்களுக்கும் உள்ளடக்கம் மற்றும் அணுகல் திறன் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Fems WhatsApp chatbot ஊடாக கிடைத்திருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் Fio வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த WhatsApp chatbot ஊடாக 17,000 தன்னியக்க தகவல்கள் உருவாக்கப்பட்டிருந்ததுடன், 2023 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து 40 நாட்களினுள் 4000 நபர்களின் chatகளுக்கு பதிலளித்துள்ளது. மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் அறிவு மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றில் பெருமளவு இடைவெளி காணப்படுகின்றமை இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பிரத்தியேகமான மாதவிடாய் சுகாதார ஆதரவுக்கான உறுதியான தேவையையும் சுட்டிக்காட்டியிருந்தது.

அறிமுகம் செய்யப்பட்ட Fio app இல் பாவனையாளர்களுக்கு இலகுவாக தமது மாதவிடாய் திகதிகளை பதிவு செய்யும் வசதி வழங்கப்படுவதுடன், அதனூடாக அவர்களின் சக்கரம் மற்றும் கருமுட்டை வெளிப்பாடு தொடர்பான துல்லியமான எதிர்வுகூரல்களை பெற்றுக் கொள்ளவும் முடியும். மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Fio இனால், எதிர்வுகூரல்கள் உறுதி செய்யப்படுவதுடன், insights பிரிவில் காணப்படும் அறிவூட்டும் அம்சங்கள் மருத்துவ ரீதியில் உறுதியானவையாகவும், பெறுமதி வாய்ந்த தாங்கிக் கொள்ளும் மூலோபாயங்களை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும், app இல் ‘Ask a Doctor’எனும் வசதியும் காணப்படுகின்றது. இதனூடாக தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிவதுடன், ஆதரவை கோரவும் முடியும். முக்கியமான தினங்கள் தொடர்பான நினைவூட்டல்கள் மற்றும் சுகாதார நெப்பின் தயாரிப்புகளை சௌகரியமான முறையில் ஓடர் செய்து கொள்வதற்காக e-store போன்றன காணப்படுவதுடன், பாவனையாளர்களுக்கு ஆதரவளிக்கும், தகவல்கள் நிறைந்த கட்டமைப்பை பெற்றுக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும கூட்டாண்மை விவகார பணிப்பாளர் ஜானகி கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “Fio app இன் அறிமுகத்தினூடாக, இலங்கையில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் காணப்படும் சமூகசார் கட்டுப்பாடுகள் மற்றும் அமைதி ஆகியவற்றை தகர்ப்பதற்கான எமது ஆழமான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அணுகல், அறிவு மற்றும் உள்ளடக்கமான தீர்வினூடாக கட்டுப்பாடு போன்றவற்றுக்கு வலுவூட்டுவதனூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த பெண்களுக்கு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, தமது சுகாதாரம் தொடர்பில் நம்பிக்கையுடன் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள உதவுகிறோம்.” என்றார்.

Fio என்பது ஒரு மாதவிடாய் தடங்காணல் என்பதற்கு அப்பால், பெண்களுக்கு தமது மாதவிடாய் சுகாதார பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவை பெற்றுக் கொடுப்பதற்கான அறிவார்ந்த மற்றும் பாதுகாப்பான சமூக கட்டமைப்பாக அமைந்துள்ளது. ‘Ayubo Healthcare Solutions’ உடன் Fems கைகோர்த்து, பாவனையாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.

ஹோமாஸ் கன்சியுமர் பிரான்ட்ஸ் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சியான் ஜயவீர கருத்துத் தெரிவிக்கையில், “மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் பரந்தளவு புரிந்துணர்வின்மை என்பதை நாம் உணர்ந்து, மும் மொழிகளிலும் அணுகக்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்த ஊக்குவிக்கப்பட்டிருந்தோம். இலங்கையின் சகல பெண்களுக்கும் Fio இனால் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான புரிந்துணர்வை வலிமைப்படுத்திக் கொள்ள அவசியமான சாதனங்களை அணுகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

iOS மற்றும் அன்ட்ரொயிட் கட்டமைப்புகளில் டவுன்லோட் செய்யக்கூடிய வகையில் இந்த app கிடைக்கின்றது. இந்த app ஐ வடிவமைப்பதற்காக Afno Asia Pacific உடன் Fems கைகோர்த்திருந்தது.

App Store – https://apps.apple.com/lk/app/fio-by-fems/id6504173337

Google Play – https://play.google.com/store/apps/details?id=lk.hemas.fio

Fems சந்தைப்படுத்தல் முகாமையாளர் சச்சினி கமகே கருத்துத் தெரிவிக்கையில், “மாதவிடாய் தொடர்பான கேள்விகளுக்கு, சகல பெண்களுக்குமான அறிவுக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான பகுதியாக Fio தொடர்ந்தும் வளர்ச்சியடையும். எந்தவொரு வினாக்களுக்கும் தவறாமல் பதிலளிக்கும் கட்டமைப்பாக இதை பேணுவது எமது இலக்காகும். ஒவ்வொரு பாவனையாளருக்கும் தமது மாதவிடாய் பயணத்தின் போது ஆதரவளிக்கப்படுவதாக உணர்வர்.” என்றார்.

சுகாதாரம், அறிவு மற்றும் உள்ளடக்கம் எனும் கலாசாரத்தை பெண்கள் மத்தியில் முன்னெடுக்கும் பயணத்தில் இந்த Fio app அறிமுகம் என்பது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. தாம் எந்த மொழி அல்லது பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பெண்களுக்கு தமது மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் கட்டுப்பாட்டை தம் வசம் கொண்டிருப்பதற்கான நம்பிக்கையை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தக் கட்டமைப்பு அமைந்துள்ளது.

Fems பற்றி:

பெண்கள் மாதவிடாய் சுகாதார நெப்பின்களை வர்த்தக நாமமாக 2004 ஆம் ஆண்டில் Fems ஆரம்பிக்கப்பட்டது. பெண்களுக்கு சுதந்திரமாகவும், சமூகமட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு வெளியில் வருவதற்கும் கைகொடுப்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றது.

சிக்கனமான, உயர் தரம் வாய்ந்த சுகாதார நெப்பின்களை சகல நிலைகளையும் சேர்ந்த பெண்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை வழங்குவதற்கு Fems தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது தயாரிப்பு தெரிவுகளில் Aya தயாரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. தரத்தில் கவனம் செலுத்துவதுடன், சிக்கனமான தயாரிப்புகளை நாடும் நுகர்வோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான புரிந்துணர்வு மற்றும் கரிசனையுடன், அதிகரித்துச் செல்லும் பெண்களுக்கான மாதவிடாய் தூய்மை தேவைகளை நிவர்த்தி செய்வதில் Fems கவனம் செலுத்தி, அவர்களுக்கு சௌகரியமாகவும், நம்பிக்கையுடனும், ஆதரவுடனும் திகழ்வதை உறுதி செய்ய பங்களிப்பு வழங்குகின்றது. பெண்கள் மாதவிடாய் கால பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் Fems தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பில் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதை தனது வர்த்தக நாம நோக்காகக் கொண்டு, மாதவிடாய் தொடர்பில் நிலவும் மூட நம்பிக்கைகளை இல்லாமல் செய்வதிலும் கவனம் செலுத்துகின்றது. பெண்களின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு, அவர்களின் பயணத்துக்கு ஆதரவளித்து, அவர்களின் வலிமையை கொண்டாடும் நாமமாகவும், வலுவூட்டலின் அடையாளமாகவும் Fems திகழ்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு, பார்வையிடவும் https://hemas.com/brands/fems.html

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )