தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நண்பகல் 12 வரை ஏற்கப்படும். 

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நண்பகல் 12 வரை ஏற்கப்படும். 

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், உதவித் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் ஆகியோர் வேட்புமனுக்களை ஏற்கவுள்ளார்கள்.
தேர்தலுக்கான கட்டுப்பணங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது.
எதிர்வரும் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை இன்று நண்பகல் 12 மணி வரை சமர்ப்பிக்கலாம். பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு அடுத்த மாதம் 14ஆம் திகதி நடைபெறும்.
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற சகல வாக்களார்களும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தபால்மூலம் வாக்களித்த வாக்காளர்களும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை 2024ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தபால் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்களின் நலன்கருதி வாக்காளர் இடாப்பு மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டு;ள்ளன.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )