பொருளாதார நெருக்கடிக்கு விக்ரமசிங்கவே காரணம்.

நாட்டில் ஏற்பட்ட திடீர் நெருக்கடிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணகர்த்தா எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மீரிகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று தாம் இல்லையென்றால், எரிவாயு, எரிபொருள் மற்றும் டொலருக்கு நெருக்கடி ஏற்படும் என்று தெரிவிப்பதற்கு ரணில் எரிவாயு நிறுவன உரிமையாளரோ, அரேபியச் சுல்தானோ அல்ல.

அத்துடன், தாம் எழுந்து சென்றால் டொலரின் பெறுமதி 400 ரூபாய் வரை உயரும் என்கிறார். அவரே நாட்டில் எரிபொருள் இல்லாத ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்தினார் என திரு.திசாநாயக்க குறிப்பிட்டார்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ரணில் வாங்கிய 12.5 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திர கடன்களையே, செலுத்த முடியாது என கோட்டாபய அரசாங்கம் அறிவித்தது.

எனவே, நாட்டில் திடீரென டொலர் நெருக்கடி ஏற்பட்டு, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதற்கு ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பு கூற வேண்டும் எனத் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )